25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராபி வென்றது. இந்தியா கிரிக்கெட் ஆர்வலர்கள் கொண்டாட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராபி வென்றது. இந்தியா கிரிக்கெட் ஆர்வலர்கள் கொண்டாட்டம்.

நேற்று நடந்த பைனலில், உல கின் 'நம்பர்-1' அணியான இந் தியா, நியூசிலாந்தை (நம்பர்-4) எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், 'பேட்டிங்' தேர்வு செய்தார். காயம் அடைந்த மாட் ஹென்றிக்கு பதில் நாதன் ஸ்மித் இடம் பெற்றார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

 முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50  ஓவரில் 7 விக்கெட்டுக்கு 251 ரன் எடுத்தது. 

இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன் எடுத்து *வெற்றி பெற்று, சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. 

ஐ.சி.சி., அரங்கில், இந்திய அணி 7வது முறை கோப்பை வென்றது. நேற்று 3வது முறையாக (2002, 2013,2025) சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்தியா, தலா 2 உலக கோப்பை (1983, 2011), 'டி-20' உலக கோப்பை (2007, 2024) கைப்பற்றியதுஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா. இதுவரை 3 முறை (2002, 2013, 2025) சாம்பியன் ஆனது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா (2006, 2009) உள்ளது. தென் ஆப்ரிக்கா (1998), நியூசிலாந்து (2000), இலங்கை (2002), வெஸ்ட் இண்டீஸ் (2004), பாகிஸ்தான் (2017) தலா ஒரு முறை கோப்பை வென்றன. இதில் 2002ல் இந்தியா, இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன. 

சாம்பியன்ஸ் டிராபி பைனலில் வென்ற இந்தியா அணிக்கு கோப்பையுடன், ரூ. 19.49 கோடி சன், பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த நியூசி லாந்து அணி ரூ. 9.74 கோடி பரிசு பெற்றது. பாகிஸ்தான், துபாயில் சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. இதன் 10வது சீசன், வரும் 2029ல் இந்தியாவில் நடக்க உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News